உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் சிவராத்திரி வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் சிவராத்திரி வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத சிவராத்திரி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதனை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிவராத்திரி வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர்.அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு இன்றும் நாளையும் (ஆக. 3,4)மதுரை, விருதுநகர் மாவட்ட த்தைச் சேர்ந்த 1500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான அப்துல்லா நேற்று ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் சாப்டூர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நான்கு வனச்சரக வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் போர்வையில் சமூக விரோதிகள், நக்சல்கள் ஊடுருவதை தடுக்க நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை