உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் செயல்படாத நிலையில் பள்ளி பகுதிகளில் சோலார் சிக்னல்கள்

விருதுநகரில் செயல்படாத நிலையில் பள்ளி பகுதிகளில் சோலார் சிக்னல்கள்

விருதுநகர், : விருதுநகரில் பள்ளி பகுதியில் மாணவர்கள் ரோட்டை கடக்க ஏதுவாக அமைக்கப்ட்ட சோலார் சிக்னல்கள் செயல்படாமல் இருப்பதால் பெற்றோர், மாணவர்கள் ரோட்டை கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.விருதுநகரை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் இருந்து பஸ்சில் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் ரோட்டை கடப்பதற்கு ஏதுவாக சோலாரில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களை நிறுவப்பட்டுள்ளது.இந்த சோலார் சிக்னல்கள் மூலம் டூவீலர், கார், கனரக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளி அமைந்துள்ள வளாகம் என தெரிந்து வேகத்தை குறைத்து மிதமான வேகத்தில் கடந்து செல்வர். இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் ரோட்டை கடப்பது எளிதானதாக இருந்தது.இந்நிலையில் விருதுநகர் - காரியாபட்டி ரோட்டில் எஸ்.எப்.எஸ்., பள்ளி அருகே அமைக்கப்பட்ட சோலார் சிக்னல் பராமரிப்பு இல்லாததால் செயல்படாமல் உள்ளது. இதனால் பஸ்சில் வரும் மாணவர்கள் ரோட்டை கடந்து பள்ளிக்கு செல்வது சிரமமாக உள்ளது. மேலும் சிக்னல் செயல்படாததால் வாகனங்களில் வருபவர்கள் வேகமாக வந்து மாணவர்கள் மீது மோதி விபத்து நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இதே போன்றே நகரின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பல சோலார் சிக்னல்கள் செயல்படாமல் வெறும் இரும்பு கம்பியாகவே உள்ளது.இது குறித்து புகார் தெரிவிக்கும் போது பராமரிப்பு செய்து செயல்பாட்டிற்கு கொண்டுவராமல், சோலார் சிக்னல்களை அதிகாரிகள் கழற்றி சென்று விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே விருதுநகரில் பள்ளிகளுக்கு அருகே அமைக்கப்பட்டு போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள சோலார் சிக்னல்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை