உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் உதவித்தொகை அஞ்சலகங்களில்  சிறப்பு முகாம்

விவசாயிகள் உதவித்தொகை அஞ்சலகங்களில்  சிறப்பு முகாம்

விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு:பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட உள்ள 17வதுதவணையான ரூ.2 ஆயிரம் உதவித்தொகைஅஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்டஸ் வங்கியின் வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள அஞ்சலகங்களில் கட்டணமின்றி எடுத்து கொள்ளலாம்.பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்தும்அருகில் உள்ள அஞ்சலகங்கள் தபால்காரர்கள்,கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் கட்டணமின்றி ரூ.10 ஆயிரம் வரை பெற்று கொள்ளலாம்.இதற்காக ஜூன் 30 வரை ஐ.பி.பி.பி., சேவை வழங்கப்படும் அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்துவதற்கு அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதே போல் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மூலம் நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகள், முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, விதவை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, சிலிண்டர் மானிய பயனாளிகள் தபால் ஊழியர்கள் மூலம் தங்கள் வங்கிகணக்கில் இருந்து கட்டணின்றி பணம் எடுத்து கொள்ளலாம்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை