| ADDED : ஜூலை 27, 2024 05:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ரத வீதிகளில் உள்ள மேல்நிலை மின்கம்பிகளை புதைவட மின் கம்பி பாதைகளாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ரூ 1.82 கோடியில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா வரவேற்றார். திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் பேசினர்.விழாவில் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், நகராட்சி துணைத் தலைவர் செல்வமணி, நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி, உதவி செயற்பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.