உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்பு

மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.அருப்புக்கோட்டை அருகே மடத்துப்பட்டி, குலசேகரநல்லூர், தமிழ்பாடி உட்பட கிராமங்களில் சீனி அவரைக்காய் விவசாயம்செய்து வருகின்றனர். அனைத்து காலங்களிலும் சீனி அவரை வளரக்கூடியது. மிதமான தண்ணீர் இருந்தால் போதுமானது. விதைத்த 40 நாட்களிலேயே காய்கள் வர துவங்கி விடும். பூக்கள் வந்து காய்கள் ஆக மாறும் நிலையில் அருப்புக்கோட்டை பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் பூக்கள்உதிர்ந்தது. ஒரு செடியில் கொத்து கொத்தாக வளரும் சீனி அவரைக்காய், மழை பெய்ததால் பூக்கள் உதிர்ந்து ஒரு செடியில் ஒரு சில காய்கள் வந்துள்ளது. நன்கு விளைச்சல் வரக்கூடிய நிலையில் மழை பெய்ததால் சீனிஅவரை விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. சீனி அவரைக்காய் விதைகள் உற்பத்திக்காக இந்த பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. தற்போது விளைச்சல் பாதிப்பால் விதைகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட உள்ளது. விலையும் உயரும் வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ