உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில் முன் விழுந்து தற்கொலை

ரயில் முன் விழுந்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அத்திகுளத்தை சேர்ந்தவர் கண்ணன், 44 தச்சு தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக நேற்று காலை 8:45 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயில் முன்பகுதியில் பாய்ந்து கண்ணன் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

தவறி விழுந்து காயம்

விருதுநகரை சேர்ந்தவர் சதீஷ். நேற்று காலை தென்காசியில் இருந்து மதுரை சென்ற ரயிலில் பயணித்த போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் தவறி விழுந்து காயமடைந்தார். அவரை ரயில்வே போலீசார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ