| ADDED : மே 01, 2024 07:43 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும்மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப். 29 முதல் மே 13 வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாவட்டத்தில் 18 வயது உட்பட்ட மாணவர்களுக்கு 15 நாட்கள் காலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இம்முகாமில் ஹாக்கி, டென்னிஸ், தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.பங்கேற்கும் மாணவர்களுக்கு பால், முட்டை, பிஸ்கட் வழங்கப்படும். முடிவில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முகாமில் சேர ரூ.200செலுத்தி மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்து விளையாட்டு திறனை மேம்படுத்த கொள்ளலாம், என்றார்.