உள்ளூர் செய்திகள்

தவச உற்ஸவ நடைபயணம்

ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி சாட்சியாபுரத்தில் சி.எஸ்.ஐ. மதுரை ராமநாதபுரம் திருமண்டலம் சார்பில் 134 வது தவச உற்சவ பண்டிகை நேற்று துவங்கி 14 வரை நடக்கிறது.இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் சி. எஸ். ஐ. தூய தோமா சர்ச்சில் இருந்து கிறிஸ்தவர்கள் சிறப்பு ஜெப வழிபாடுகளுடன் நடை பயணம் துவக்க விழா நடந்தது. பாஸ்டர் பால் தினகரன் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். போதகர் ஹெலன் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார்.ஊர்வலத்தில் பங்கேற்றோர் சிலுவை கொடி ஏந்தி பாடல்களை பாடிக்கொண்டு மல்லி, சாமி நத்தம் வழியாக சாட்சியாபுரம் பண்டிகை வளாகத்தை சென்றடைந்தனர். அங்கு மன்றத் தலைவர்கள் மற்றும் பண்டிகை ஏற்பாட்டாளர்கள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி