உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் மினி பஸ்கள் கேள்விக்குறியாகும் விருதுநகரின் நகரமைப்பு

பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் மினி பஸ்கள் கேள்விக்குறியாகும் விருதுநகரின் நகரமைப்பு

விருதுநகர்: விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் மினி பஸ்களாலும், செட் அமைத்து தெருக்களை ஆக்கிரமிக்கும் கார்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதாளசாக்கடையை போல் விருதுநகரின் நகரமைப்பும் தோல்வியடைந்த ஒன்றாக மாறி வருகிறது.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் மினி பஸ் வரக்கூடாது. ஆனால் சில நேரங்களில் மினி பஸ் அங்கேயே நீண்ட நேரம் நிறுத்தி பின் எடுக்கின்றனர். இதனால் அடுத்தடுத்து மினி பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் அருகே அணிவகுத்து நிற்கின்றன. இதை பயன்படுத்தி அடுத்தடுத்து தனித்தனி வாகனங்கள் பின்னால் ரோட்டைஆக்கிரமித்து நிறுத்தி கொள்கின்றனர். இதனால் புளுக னுாரணி ரோடே போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் இந்த ரோடு சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இது போன்ற வாகன ஆக்கிரமிப்புகள் மாணவர்களுக்கு எரிச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தும்.இதே போல் விருதுநகரில் நிறைய குறுகிய தெருக்கள் உள்ளன. பெரும்பாலான வீடுகள் வாகன நிறுத்த வசதி இன்றி கட்டப்பட்டுள்ளதால் டூவீலர்கள் தெருவில் நிறுத்தப்படுவது வழக்கம். கார்களை வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் மாதக்கணக்கில் காப்பகங்களில் வைத்து தேவைப்படும் போது எடுத்து கொள்கின்றனர். ஆனால் சில பகுதிகளில் மட்டும் செட் அமைத்து தெருக்களை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தெருக்கள் குறுகி போக்குவரத்து மோசமான நிலையில் உள்ளது. மக்களின் பரிதவிப்போடு பாதைகளை கடக்க வேண்டி உள்ளது.குறிப்பாக இந்த பிரச்னை தர்க்காஸ் தெருவில் அதிகமாக உள்ளது. தெருக்களில் அதிகளவில் கார்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். மேலும் வேறு சில தெருக்களில் அதன் பாதைகளே மறையும் அளவுக்கு கார்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. நகரின் புதிதாக கட்டப்படும் வணிக கடைகளில் பார்க்கிங் வசதி எதையும் நகரமைப்பு பிரிவினர் உறுதி செய்வதில்லை. இதனால் நாளுக்கு நாள் ரோட்டில் கார் நிறுத்துவதும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.நகரில் பேயாட்டம் ஆடும் ஆக்கிரமிப்புக்கு தற்போது வரை தீர்வு காணப்படவில்லை. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் புது புதுவிதங்களில் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. நகரமைப்பு பிரிவின் தோல்வியடைந்த செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் தான் அல்லல்படுகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் குஷியில் தான் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி