மேலும் செய்திகள்
குல்லுார் சந்தை அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
21 hour(s) ago
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
21 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
21 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புறநகர் பகுதியில் பல ஆண்டுகளாக வாறுகால் கழிவுநீர் தெருக்களில் ஓடி, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், தெருக்களில் ரோடு இல்லாமல் அவதிப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நாகலிங்க நகர் பகுதியில் உள்ளது புறநகர் பகுதியான குறிஞ்சி நகர். இதில் 8 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இங்குள்ள 2 வது தெருவில் வாறுகால் சீராக அமைக்கப்படாததால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது . மழை காலத்தில் தெரு முழுவதும் கழிவுநீரும், மழைநீரும் கலந்து வெள்ள காடாக மாறி, தெருவில் நடக்க முடியாமல் உள்ளது. பலமுறை இது குறித்து நகராட்சியில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. இதனால் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியினால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவிற்கு கொசு தொல்லை உள்ளது. குறிஞ்சி நகரின் மெயின் ரோடு சேதம் அடைந்து, கற்கள் பெயர்ந்து உள்ளது. தெருக்களிலும் ரோடு வசதிகள் இல்லை. இந்தப் பகுதிகளுக்கு புதியதாக ரோடு அமைக்க வேண்டும். நகராட்சி மூலம் வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை விடுகின்றனர். தற்போது வரும் குடிநீர் கருப்பாகவும் அதிக அளவில் மண் கலந்து வருகிறது. குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்த முடியவில்லை. உப்பு சுவையாக உள்ளது. பயன்படுத்த முடியாத குடிநீர் உட்பட, நாங்கள் வரிகள் கட்டுகிறோம் என பெண்கள் புகார் கூறுகின்றனர்.இந்தப் பகுதியில் பெரிய கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளது. இவற்றில் தனியார் பிளாட் போட்டுள்ளனர். நீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் மற்ற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நகர் பகுதியில் கொண்டு வரப்படவில்லை. இந்தப் பகுதியில் இந்த திட்டத்தை கொண்டு வர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாறுகால் சுத்தப்படுத்த வேண்டும்
நாகரத்தினம், குடும்பதலைவி : குறிஞ்சி நகர் 2வது தெருவில் வாறுகால் சேதமடைந்து கழிவு நீர் வெளியேற முடியாமல் தெரு முழுவதிலும் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. பலமுறை இதை சரி செய்ய கோரி, நகராட்சியில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தினமும் நாங்கள் கொசு கொடியினால் அவதிப்படுகிறோம். கழிவுநீரை சீராக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த வெளியில் மின் மோட்டார்
கணேசன், நெசவாளர்: குறிஞ்சி நகர் 2வது தெருவில் நகராட்சியின் மினிபவர் பம்ப் தொட்டி உள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் மற்றும் வயர்கள் திறந்த வெளியில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. மழை பெய்தால் இவற்றில் தண்ணீர் புகுந்து விடுகிறது. குழந்தைகளும் இந்தப் பகுதியில் தான் விளையாடுகின்றனர். மின் மோட்டாரை பாதுகாப்பாக மூடி வைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோடு இல்லை
வேலம்மாள், குடும்பதலைவி: குறிஞ்சி நகருக்கு வரும் மெயின் ரோடு சேதம் அடைந்து நடக்க முடியாமல் உள்ளது. உள்ள பல தெருக்களிலும் ரோடுகள் அமைத்து ஆண்டு கணக்கில் ஆகிறது. ரோட்டில் நடக்க முடியாமல் வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். எங்கள் பகுதியில் ரோடுகள், வாறு கால்கள் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிக்கு தேவையான வரிகளை கட்டுகிறோம். ஆனால் வசதிகள் இல்லை.---
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago