உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு, குடிநீர் இல்லை, நிரம்பி வழியும் வாறுகால் தவிப்பில் ரோசல்பட்டி பெரியார் தெரு மக்கள்

ரோடு, குடிநீர் இல்லை, நிரம்பி வழியும் வாறுகால் தவிப்பில் ரோசல்பட்டி பெரியார் தெரு மக்கள்

விருதுநகர்: பள்ளங்கள் நிறைந்த ரோடு, குடிநீர் விநியோகம், புதிய வாறுகால் இல்லை, வாடகை கட்டடத்தில் ரேஷன் கடைகள் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் ரோசல்பட்டி பெரியார் தெரு மக்கள்.விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சியின் பெரியார் தெருவில் நுாறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ரோடு அமைத்து பல ஆண்டுகளாகிறது. இந்த ரோடு தற்போதும் சேதமாகி பள்ளங்களால் நிறைந்துள்ளது.மழைக்காலத்தில் சேறும், சகதியுமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது ரேஷன் கடைகளுக்கு பொருட்களை இறக்குவதற்காக வரும் லாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றன. இப்பகுதியில் வாறுகால் அமைத்து பல ஆண்டுகளாகிறது. இவற்றை முறையாக துார்வாரினாலும் பழைய வாறுகால் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் மழை நீர், கழிவு நீருடன் கலந்து தாழ்வான வீடுகள் உள்ள பகுதிகளுக்கு முன்பு தேங்கிறது. இதில் வரும் துார்நாற்றத்தால் வீடுகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இப்பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் வீடுகளுக்கு தேவையான குடிநீரை வாகனங்களில் குடத்திற்கு ரூ. 10 என விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் இங்கு உப்புத்தண்ணீர் வசதியை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் ஒரே இடத்தில் வாடகையில் கட்டடத்தில் செயல்படுகிறது. இதை மக்களுக்கு பயன்படும் வகையில் அந்தந்த பகுதிகளுக்கு மாற்றி புதிய கட்டங்களில் செயல்படுத்த வேண்டும்.பழைய ரோடு முழுவதும் சேதமாகி பள்ளங்களாக உள்ளது. இதனால் வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இப்பகுதியில் புதிய ரோடு அமைப்பதற்கான பணிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.- மாரிக்கனி, சுயதொழில்.இங்கு வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் இதுவரை செய்யப்படவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை தொடர்கிறது. எனவே ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செயல்படுத்த வேண்டும்.- உமா மகேஸ்வரி, குடும்பத்தலைவி.

குடிநீர் இல்லை

பழைய வாறுகால்களில் பல பகுதிகளில் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளில் துார்நாற்றம் வீசுகிறது. இவற்றை அடிக்கடி சுத்தம் செய்தாலும் கழிவு நீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவு நீர் தேங்காதவாறு புதிய வாறுகால் அமைத்து தர வேண்டும்.- மாரிக்கனி, எத்திராஜ், தனியார் ஊழியர்.

புதிய வாறுகால் ஏற்படுத்துங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை