மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
10 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 hour(s) ago
நரிக்குடி : நரிக்குடி வீரசோழனில் ஜமாத்தில் தேர்தல் நடத்த வலியுறுத்திய தரப்பினரை டிரஸ்ட் நிர்வாகம் ஒதுக்கி வைத்திருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.நரிக்குடி வீரசோழனில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆடு பலியிட்டு குர்பானி கொடுப்பர். பின் ஆட்டுத் தோல்களை டிரஸ்ட்க்கு தானமாக கொடுப்பது வழக்கம்.இந்நிலையில் அப்துல் ஹக் தரப்பைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினர் ஆடு பலியிட்ட நிலையில், ஆட்டு தோல்களை வீரசோழன் டிரஸ்ட் நிர்வாகம் வாங்க மறுத்தது. ஜமாத்தில் தேர்தல் நடத்த வலியுறுத்தி வருகிறோம். இதனால் சமூகப் புறக்கணிப்பு செய்து எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர்' என போலீசில் புகார் கொடுத்தார்.டிரஸ்ட் நிர்வாகத்திடம் கேட்டபோது, அக்குடும்பத்தினர் ஆடுகளை குர்பானி கொடுத்ததே நிர்வாகத்திற்கு தெரியாது. தெரிந்திருந்தால் ஆட்டு தோல்களை வாங்கி இருப்போம், வேறு காரணம் எதுவும் கிடையாது' என்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago