உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுவர் விழுந்து சிறுவன் பலி

சுவர் விழுந்து சிறுவன் பலி

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகன் சுஜித், 3. முனீஸ்வரன் தன் நண்பர் சண்முகத்துடன் டூ - வீலரில் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பெரிய மருளுத்து பஸ் ஸ்டாப் அருகே வந்தார். அங்கு கெமிக்கல் கம்பெனி அருகே மரங்களில் இருந்து நாவல் பழங்களை முனீஸ்வரன், சண்முகம் சேகரித்தனர்.அப்போது, ஓரமாக நின்ற சுஜித் பழங்களை சேகரிக்க வந்தார். சுஜித் காம்பவுண்ட் சுவர் அருகே நிற்பது தெரியாமல் சண்முகம் மரத்தில் ஏறுவதற்காக சுவரில் ஏறினார். அப்போது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவயிடத்திலேயே சுஜித் பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ