மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
ராஜபாளையம் : குடிநீர் பற்றாக்குறை, பாதி இடங்களில் ரோடு இல்லை, குப்பை வெளியேற்ற வழி இல்லை என சத்திரப்பட்டி அடுத்த சமுசிகாபுரம் பி.டி.ஆர் நகர் குடியிருப்புவாசிகள் எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.இதுகுறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் ராஜ், அழகர்சாமி, சக்திவேல், முனியசாமி, ரமேஷ், கூறியதாவது, குடியிருப்பு உருவாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகியும் சாக்கடை வசதி முழுமை அடையவில்லை. பாதி வீடுகளின் கழிவுநீர் வெளியேற வழியின்றி அருகாமை பகுதி காலியிடங்களில் விட்டு தேவையற்ற சச்சரவு ஏற்படுகிறது. மெயின் தெரு பக்கவாட்டு பகுதி என 11 தெருக்களில் 5ற்கு இதுவரை ரோடு வசதி செய்து தரவில்லை. குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை ஆகிறது. பல்வேறு பகுதியில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களால் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. வாரம் இரு முறை சப்ளை வேண்டும்.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 10ஆயிரம் லிட்டர் வசதியுள்ள பழைய தொட்டி போதுமானதாக இல்லை. ஜல் ஜீவன் திட்ட குழாய் இணைப்பும் இதுவரை கிடைக்கவில்லைகுடியிருப்புகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் குவிந்து வெளியேற்ற முடியாமல் ஓடையில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் குடியிருப்பு வாசிகள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றன.தெருவிளக்கு வெளிச்சம் போதிய அளவு இல்லாததுடன் பழுதானால் சரி செய்ய பல நாட்கள் ஆகிறது.நீர் ஓடைகளில் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறுவதும் மழைக்காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. உயரமாக அமைக்க வேண்டும்.கானாக்குளம் கண்மாய் பாதை உபயோகித்து வந்த 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைக்கு செல்லும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் கண்மாய் கலிங்கல் பாதை மண்ணரித்து பள்ளமாகிவிட்டதால் குடியிருப்பு வழியே சென்று ரோட்டை மேலும் மோசமாக்கி வருகிறது. பாதையை சரி செய்து போக்குவரத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க வேண்டும், என்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago