| ADDED : ஜூன் 23, 2024 03:27 AM
காரியாபட்டி: காரியாபட்டி முக்குரோட்டிலிருந்து பஜார் வரையிலும், பை பாஸ் வரையிலும் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதும், கடைகாரர்கள் ரோடு வரை ஆக்கிரமிப்பதும் தொடர்கதையாக இருப்பதால் பேவர் பிளாக் கற்கள் பதித்து, மெட்டல் தூண் அமைக்க வேண்டும்.காரியாபட்டி பேரூராட்சியில் சிறு, குறு தொழில்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. காய்கறி கடைகள், பாஸ்ட் புட் கடைகள், பழ வியாபாரிகள் என ஏராளமானோர் ரோட்டோரங்களை ஆக்கிரமித்து கடை வைக்கின்றனர். கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. முக்கு ரோட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல படாதபாடு பட வேண்டியிருக்கிறது. அதே போல் முக்கு ரோட்டிலிருந்து பைபாஸ் ரோடு வரை ரோட்டில் விளம்பர பலகை வைத்து ஆக்கிரமிப்பது, டூவீலர்களை ரோட்டில் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி, வாறுகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கழிவு மண்ணை ரோட்டோரத்தில் போட்டுள்ளதால் கடைக்கு பொருட்கள் வாங்க வாகனங்களில் வருபவர்கள் ரோட்டில் நிறுத்துகின்றனர். டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் ரோட்டை மறித்து டூவீலர்களை நிறுத்துகின்றனர். தினமும் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.முக்கு ரோட்டில் இருந்து பைபாஸ் வரையிலும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் ஏராளமாக உள்ளது. வாறுகால் பணிக்காக ரோடு வரை வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது 100 மீ., அகலத்திற்கு இடம் காலியாக உள்ளது. ரோட்டில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து வருகின்றனர். அதேபோல் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆபத்தான வளைவு உள்ளது அதிவேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.