உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வண்டல் மண் ஏற்றி செல்லும் லாரிகள்

விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வண்டல் மண் ஏற்றி செல்லும் லாரிகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வண்டல் மண் ஏற்றி செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் இயங்குவதால் சகவாகன ஓட்டிகள் பாதிப்பை சந்திக்கின்றனர்.மாவட்டத்தில் 283 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. பல இடங்களில் ஊராட்சி ஒன்றியத்தின் ஓவர்சீயர்கள், நீர்வளத்துறையின் உதவி பொறியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் முழுவீச்சில் கண்காணிப்பு இல்லை. இதை பயன்படுத்தி ஆங்காங்கே ஆழமாக தோண்டுவது நடந்து வருகிறது. இந்நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் வண்டல் மண் அள்ளும் நபர்கள் வேக வேகமாக மண்ணை எடுக்க வேண்டி டிராக்டர் டிரைவர்களை நிர்பந்தப்படுத்துகின்றனர்.இதனால் பல பகுதிகளில் வேகமாக சென்று விபத்தை சந்திக்கின்றனர். இதற்கு அனுமதி சீட்டு பெற்ற நபர்களின் பேராசை முக்கிய காரணமாக உள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பில் இல்லாத நேரங்களை பயன்படுத்தி அசுர வேகத்தில் வாகனத்தை இயக்க அள்ள முயற்சிக்கும் இவர்களால் டிரைவர்களும் திண்டாடுகின்றனர். அதிக பண ஆசை காட்டி வண்டல் மண் டிராக்டர்களை இவ்வாறு இயக்குகின்றனர்.இது ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் அவ்வழியாக ரோடுகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. டிராக்டர் செல்லும் போதே சக வாகன ஓட்டிகள் பதறி துன்பப்படுகின்றனர். மண் துாசுகள் வீசி பாதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்