மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
10 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 hour(s) ago
விருதுநகர்:விருதுநகர் அருகே பெரிய வாடியூர் விலக்கில் மினி லாரியில் 4.1 டன் ரேஷன் அரிசி கடத்திய சிவா, 29, உடந்தையாக இருந்த வடமலாபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் தெய்வமுனி, 52 இருவரையும் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கன்னியாகுமரி தெள்ளாந்தியைச் சேர்ந்தவர் சிவா. இவர் மினி லாரியில் 82 பாலிதீன் பைகளில் 4.1 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தார். பெரிய வாடியூர் விலக்கில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் கண்டறிந்து அரிசியை பறிமுதல் செய்து சிவாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு திருத்தங்கல் அருகே வடமலாபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் தெய்வமுனி, 52, உடந்தையாக இருந்தது தெரிந்தது. இருவரும், விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
10 hour(s) ago
10 hour(s) ago