மேலும் செய்திகள்
வேன் கவிழ்ந்து இருவர் காயம்
01-Mar-2025
சாத்துார்: சாத்துார் அருகே சிவனைந்தபுரம் விலக்கில் கண்டெய்னர் லாரி சாலை நடுவில் கவிழ்ந்ததில் எதிர் திசையில் வந்த இரண்டு கார்கள் இதன் மீது மோதியதில் காரில் வந்த இருவர் காயமடைந்தனர்.திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் உச்சி மாகாளி, 50. கன்டெய்னர் லாரி டிரைவர் ,கங்கைகொண்டானிலிருந்து பெங்களூருவுக்கு லாரியை ஓட்டிச் சென்றார். கோவில்பட்டி சாத்துார் நான்கு வழிச்சாலையில் சிவனைந்தபுரம் போலீஸ் செக்போஸ்ட் அருகில் நேற்று காலை 9:00 மணிக்கு பேரிக் கார்டை வேகமாக கடந்த போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்தது.எதிர் திசையில் வந்த இரு கார்கள் அடுத்தடுத்து கண்டெய்னர் மீது மோதின. காரில் வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த முத்து பிரகாஷ் ,38 .சிவகாசியை சேர்ந்த வீர பிரபாகரன், 40. இருவர் படுகாயம் அடைந்தனர் . கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Mar-2025