உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிலத்தை அளக்க ரூ.25,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

நிலத்தை அளக்க ரூ.25,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

காரியாபட்டி:நிலத்தை அளக்க ரூ.25,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., மற்றும் அவருக்கு உதவியவரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கீழஉப்பிலிக்குண்டையைச் சேர்ந்தவர் நக்கீரன், 35. இவரது நிலத்தை அளவீடு செய்ய, டி.கடமன்குளம் வி.ஏ.ஓ., செல்வராஜ், 48, என்பவரை அணுகினார். அவர் 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நக்கீரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.நேற்று காலை வி.ஏ.ஓ., செல்வராஜிடம் அவரது அலுவலகத்தில் வைத்து நக்கீரன், 25,000 ரூபாயை கொடுத்த போது, அருகில் கடை வைத்துள்ள அவரது நண்பர் டெய்லர் மோகன்தாஸ், 52, என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார்.மோகன்தாசிடம் பணத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., மற்றும் டெய்லரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை