உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் லட்சுமிநகரில் பஸ்ஸ்டாப் வடிகால் சிலாப் சேதம்; பயணிகள் பரிதவிப்பு

விருதுநகர் லட்சுமிநகரில் பஸ்ஸ்டாப் வடிகால் சிலாப் சேதம்; பயணிகள் பரிதவிப்பு

விருதுநகர் : விருதுநகர் லட்சுமிநகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள வடிகால் சிலாப்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகரின் லட்சுமிநகர், பெத்தனாட்சி நகர், சிவஞானபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு பொதுவானதாக நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் லட்சுமிநகரில் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு காலை, மாலை நேரங்களில் மதுரை, கள்ளிக்குடி, திருமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பணிக்காகவும், பணிமுடிந்து வீட்டிற்கு செல்ல பலரும் பஸ்சிற்காக காத்திருக்கின்றன.இந்நிலையில் இந்த பஸ் ஸ்டாப் முன்புறம் செல்லும் வடிகாலை தாண்டி பயணிகள், நடந்து செல்பவர்கள் எளிதாக கடந்து செல்ல சிமெண்ட் சிலாப்கள் அமைக்கப்பட்டது. ஆனால் சிலாப்கள் அனைத்தும் தற்போது சேதமாகி இடிந்து விழுந்துள்ளது. மேலும் சென்னை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்களை ஏற்றிச் செல்ல ஆம்னி பஸ்கள் லட்சுமிநகர் பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றன.இதனால் மாலை, இரவு நேரத்தில் அதிக பயணிகள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் ஏற்படுகிறது. இதில் சிலர் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் போது பஸ் வந்து விட்டால் அதில் ஏறுவதற்காக செல்லும் போது பள்ளத்தில் விழுந்து காயமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் சிலாப்கள் எப்போது உடைந்து விழும் என்ற அச்சத்துடன் பயணிகள் நிற்கின்றனர்.எனவே விருதுநகர் லட்சுமி நகர் பஸ் ஸ்டாப் முன்பு உள்ள வடிகாலில் சேதமான சிமெண்ட் சிலாப்புகளை அகற்றி புதிய சிலாப்களை அமைக்கும் பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ