சாத்துாரில் பெண்களிடம் நகை பறிப்பு * 3 பேர் கைது
சாத்துார்,: சாத்துாரில் பெண்ணிடம் கத்தியை காட்டியும், நடந்து சென்ற மற்றொரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை இருசக்கரவாகனத்தில் வந்து பறித்துச் சென்ற நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சாத்துார் வளரும் நகரை சேர்ந்த ராமலட்சுமி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மற்றொரு ராம லட்சுமி, தனியாக நடந்து வந்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து 14 பவுன் நகையை பறித்து சென்றனர்.சாத்துார் டி.எஸ்.பி நாகராஜன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வந்தது. சிசிடிவி பதிவுகளை வைத்தும் குற்ற பதிவேடுகளை வைத்தும் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.போலீஸ் விசாரணையில் திருச்சி கோவிந்தராஜ் ,28. கோவை சூரிய பிரசாந்த், 24. ஆகியோர் பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் திருடிய நகைகளை திருச்சி உறையூர் ராஜு கிட்டு, 28. விடம் நகையை விற்றது தெரியவந்தது.தனிப்படை போலீசார் மூவரையும் திருச்சியில் கைது செய்து 14 பவுன் நகையை மீட்டனர். மூவர் மீதும் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சாத்துார் போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.