உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலசலிங்கம் பல்கலையில் மகளிர் குழு துவக்கம்

கலசலிங்கம் பல்கலையில் மகளிர் குழு துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார், : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் ஐ.-இ.இ.இ. துறையில் மகளிர் குழு துவக்க விழா நடந்தது. பல்கலைக்கழக இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். டீன் தீபலட்சுமி முன்னிலை வகித்தார். மாணவி திவ்ய பாலா வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினார். ஸ்ரீ சர்மிளா மகளிர் குழுவினை துவக்கி வைத்து பேசினார். விழாவில் துறை தலைவர் சுரேஷ்குமார், பேராசிரியை லயோலோ ஜாஸ்மின் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியை பவானி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ