உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2 கடைகள் எரிந்து சேதம்

2 கடைகள் எரிந்து சேதம்

அருப்புக்கோட்ட: அருப்புக்கோட்டையில் அதிகாலையில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தது. அருப்புக்கோட்டை பெரிய கடை பஜாரில் நாடார் மகமை கடைக்கு அருகில் அரிசி மற்றும் அலைபேசி சர்வீஸ் கடை, முறுக்கு கடை உள்ளது.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அலைபேசி கடையில் தீப்பிடித்து அருகில் உள்ள முறுக்கு கடைக்கு பரவியது. தீப்பிடித்ததில் 2 கடைகளும் சேதம் அடைந்து அதில் உள்ள பொருட்கள் நாசமாயின. தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை