உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2ம் நாள் தெப்ப தேரோட்டம்

2ம் நாள் தெப்ப தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 2ம் நாள் தெப்பத தேரோட்டம் நேற்றிரவு நடந்தது.இதனை முன்னிட்டு நேற்று இரவு 7 00 மணிக்கு ஆண்டாள் கோயிலில் இருந்து பெரிய பெருமாள், ஸ்ரீதேவி , பூமாதேவி, பெரியாழ்வார், சீனிவாச பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகள், நாடக சாலை தெரு வழியாக திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார், சீனிவாச பெருமாள் எழுந்தருளினர். பின் திருமுக்குளம் மைய மண்டபத்தை தேர் 3 முறை சுற்றி வந்தது. நான்கு பக்க கரைகளிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ