மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
07-Nov-2025
சிவகாசி : சிவகாசி செவலுாரில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட சண்டையில் மூதாட்டியை கொலை செய்த மருமகள், உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே செவலுாரை சேர்ந்தவர் லட்சுமி 64. இவரது மகன் பாலமுருகனுக்கும் 39, அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மகள் முருகேஸ்வரிக்கும் 39, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் முருகேஸ்வரி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இரு நாட்களுக்கு முன்பு பாலமுருகன் அங்கே சென்று தகராறில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் முருகேஸ்வரியின் தம்பி சங்கிலி பாண்டி 36, லட்சுமியை கட்டையால் அடித்தார். காயமடைந்த அவர் விருதுநகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலையில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சங்கிலி பாண்டி, பஞ்சவர்ணம், முருகேஸ்வரியை கைது செய்தனர்.
07-Nov-2025