உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 56 வீட்டு காலனியில் நாய்கள் தொல்லை

56 வீட்டு காலனியில் நாய்கள் தொல்லை

சிவகாசி : சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி நாரணாபுரம் ரோடு 56 வீட்டு காலனியில் நாய்கள் தொல்லையால் மாணவர்கள், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி 56 வீட்டு காலனியில் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகளில் சில வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகிறது.டூவீலரில் செல்பவர்களை விரட்டும் போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். தவிர உசேன் காலனி, சிலோன் காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நடமாடுகின்ற நாய்களை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை