உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊர்வலம் செல்ல முயன்ற 60 பேர் கைது

ஊர்வலம் செல்ல முயன்ற 60 பேர் கைது

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, இ.3 சாலை பணியை முடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. இதற்காக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஊர்வலம் செல்வதற்கு போலீசார் அனுமதி கொடுக்க மறுத்ததால், ஊர்வலம் செல்ல முயன்ற கூட்டமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி 60 பேரை கைது செய்தனர். இஸ்லாமிய கூட்டமைப்பு நல்லுார் முகைதீன் ஆண்டவர்கள் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஷேக் உதுமான் தக்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !