உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீ விபத்தில் எரிந்த மண்அள்ளும் இயந்திரத்திற்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்க உத்தரவு

தீ விபத்தில் எரிந்த மண்அள்ளும் இயந்திரத்திற்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர : தீ விபத்தில் எரிந்து சேதமான மண்அள்ளும் இயந்திரத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டை அதன் உரிமையாளருக்கு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் தனியார் வங்கி கடன் மூலம் ஒரு ஜே.சி.பி. வாகனத்தை விலைக்கு வாங்கி உள்ளார். அதனை தென்காசி மாவட்டம் சிவகிரி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் ரூ. 20 லட்சத்திற்கு காப்பீடு செய்துள்ளார்.2023 மார்ச் 23 அன்று கீழ ராஜகுல ராமன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட முக்கூர் நத்தம் கிராமத்தில் வேலி முட்களை அகற்றும் போது மண்அள்ளும் இயந்திரம் பழுதாகி நின்று விட்டது.. இந்நிலையில் பக்கத்து காட்டில் மக்காச்சோளக் கழிவில் ஏற்பட்ட தீ பரவி மண்அள்ளும் இயந்திரத்திலும் பிடித்து எரிந்து முற்றிலும் சேதமாகிவிட்டது. இதுகுறித்து மாரிச்சாமி தனது மண்அள்ளும் இயந்திரத்திற்கு காப்பீடு தொகை ரூ. 20 லட்சம் வழங்க கோரி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்திடம் கோரியிருந்தார். ஆனால், நிறுவனம் இழப்பீடு தொகையை வழங்கவில்லை. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இழப்பீடு கோரி மாரிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதனை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.இதில் காப்பீடு தொகை ரூ. 20 லட்சத்தை 6 வார காலத்திற்குள் மாரிச்சாமிக்கு வழங்கவும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு தொகை ரூ. 10 ஆயிரத்தை, சிவகிரி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வழங்கவேண்டுமென உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்