உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / படிக்கட்டில் தொங்கிச் சென்றவர்களை எச்சரித்த மோட்டார் வாகன ஆய்வாளர்

படிக்கட்டில் தொங்கிச் சென்றவர்களை எச்சரித்த மோட்டார் வாகன ஆய்வாளர்

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் பல் படிக்கட்டுகளில் தொங்கிச் சென்றவர்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பிடித்து எச்சரிக்கை செய்தார்.அருப்புக்கோட்டையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொகுதி செல்வது தொடர் கதையாக இருந்ததை, நேற்று முன் தினம் தினமலர் நாளிதழில் செய்தியாக வெளி வந்தது.இதையடுத்து அருப்புக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் மற்றும் போலீசார் காந்திநகர் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த பஸ் படிக்கட்டுகளில் தொங்கி சென்றவர்களை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.இதுபோன்று தொடர்ந்து நடந்தால் அபராதம் மற்றும் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் டிரைவர், கண்டக்டர்களிடம் எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்