உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெடுஞ்சாலை ஓரம் மணல் குவியலால் விபத்து

நெடுஞ்சாலை ஓரம் மணல் குவியலால் விபத்து

ராஜபாளையம் : ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குவிந்துள்ள மணல் குவியலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.ராஜபாளையம் நகர் பகுதி நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அபாய வளைவு பகுதிகளிலும், விபத்து அதிகம் நடக்கும் இடங்களிலும் நெடுஞ்சாலைத் துறையினரால் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு வருகிறது. ரோட்டோரங்களில் குவிந்துள்ள மணல் இரண்டு பக்கங்களிலும் நீண்ட காலமாக அகற்றப்படாமல் சேர்ந்துள்ளது.ஏற்கனவே சென்டர் மீடியன் காரணமாக அகலம் குறைந்துள்ள ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களுக்கு ஒதுங்க வழியின்றி மணலில் தடுமாறி விழுந்து விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் தொடங்கி சேத்துார் வரையிலான சாலையோரங்களில் இதே நிலை காணப்படுகிறது. சாலை விபத்துக்கள் ஏற்படுவது ஒரு புறம் இருப்பினும் குவிந்துள்ள மணல் காற்றில் பறந்து மக்களின் கண்களையும் சுவாசத்தையும் பாதிக்கிறது. விபத்துகளை தவிர்க்க தகுந்த இடைவெளிகளில் மணல் குவியல்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ