உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறுகிய ஆபத்தான நரிக்குடி-வீரசோழன் ரோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை அவசியம்

குறுகிய ஆபத்தான நரிக்குடி-வீரசோழன் ரோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை அவசியம்

நரிக்குடி: நரிக்குடி ஒட்டங்குளம் வழியாக வீரசோழன் செல்லும் ரோடு கொண்டை ஊசி வளைவு, குறுகலாக, ஆபத்தாக உள்ளதால், நேராக ரோடு அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி பகுதியில் கிராமங்களுக்கு முன் வண்டி பாதையாக இருந்ததை தற்போது ரோடாக மாற்றினர். அதிக வளைவு நெளிவுகளுடன் ரோடு உள்ளது. சில கிராமங்களுக்கு அதிக கொண்டை ஊசி வளைவுகளுடன் கண்மாய் கரையில் ரோடு உள்ளது. நரிக்குடியில் இருந்து ஒட்டங்குளம் வழியாக வீரசோழன் 10 கி.மீ. அதே ஊருக்கு மானாமதுரை சாலை வழியாக சென்றால் 16 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும். அபிராமம், கமுதி உள்ளிட்ட ஊர்கள் செல்ல பக்கம் என்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 10 கி.மீ., தூரத்தில் 20க்கு மேற்பட்ட இடங்களில் கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ரோடு குறுகலாக உள்ளது. இரு வாகனங்கள் விலகுவதில் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதி வேகமாக வரும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் வளைவில் திருப்ப முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர். அப்பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. கனரக வாகனங்கள் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கொண்டை ஊசி வளைவை நேராக நிமிர்த்தி ரோடு அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ