உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெல்லும்

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெல்லும்

சிவகாசி : லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெல்லும், என சிவகாசியில் முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.சிவகாசி, திருத்தங்கலில் முன்னாள் முதல்வர் ஜெ., 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரத்ததான முகாமில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது,வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., வின் சீர்கேடுகளை மக்களிடம் கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். டெல்லியில் பழனிசாமியின் கரம் ஓங்கும். சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும்.தி.மு.க., ஆட்சியில் பட்டாசு தொழில் பிரச்னை, நெசவாளிகள் பிரச்னை, அரசு ஊழியர்களுக்கு உள்ள பிரச்னை என பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஓட்டு சேகரிப்போம். பழனிசாமி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என மக்கள் எண்ணுகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக இந்த லோக்சபா தேர்தல் அமையும். 40 தொகுதிகளிலும் வெல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ