உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அ.தி.மு.க., பா.ஜ., ஒரு அற்புதமான கூட்டணி;; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

 அ.தி.மு.க., பா.ஜ., ஒரு அற்புதமான கூட்டணி;; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர்: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி ஒரு அற்புதமான கூட்டணி என விருதுநகரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி முகவர்கள் பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் விருதுநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் ஓட்டுச்சாவடி நிலை பூத் கமிட்டி முகவர்கள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள சிறப்பு தீவிர திருத்த முடிவை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதரிக்கிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை பார்த்து தி.மு.க., பதறுகிறது. போலி வாக்காளர்களை வைத்துதான் தேர்தல் களத்தில் நிற்கிறது தி.மு.க., ஆதலால் எதைக் கண்டாலும் பயப்படுகிறது. தற்போது அதிகாரம் கையை விட்டு போகும் என்ற பயத்தில் தீவிர திருத்தத்தை காரணம் காட்டி பழியை தேர்தல் ஆணையத்தின் மீது போடுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.,விற்கு என்ன. அ.தி.மு.க., தேசபக்தி உள்ள இயக்கம். பா.ஜ., இந்த பாரதத்தை ஆளும் கட்சி. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சி. இந்திய நாட்டை நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதுகாக்கின்றனர். இவர்களுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி ஒரு அற்புதமான கூட்டணி. தி.மு.க., டில்லிக்குச் சென்றால் பா.ஜ., உடன் உறவு வைத்துக் கொள்கிறது. சென்னைக்கு வந்தால் பகை என நடிக்கிறது. இனி தமிழகத்தில் எடுபடாது. பா.ஜ.,வினர் என்ன வெளிநாட்டுக்காரர்களா. அவர்கள் நமது சகோதரர்கள், பிரிவினையை துாண்டி அதில் வெற்றி பெற முயற்சிக்கும் தி.மு.க.,வின் எண்ணத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும், என்றார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை