உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அ.தி.மு.க., பொதுக்குழு கருத்து கூற ஓ.பி.எஸ். மறுப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு கருத்து கூற ஓ.பி.எஸ். மறுப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ய வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்தார். நேற்று காலை 8:15 மணிக்கு ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.தரிசனத்திற்குப்பின் கோயிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் அ.தி.மு.க., பொதுக் குழு குறித்து கருத்து கேட்டபோது, இது ஆன்மீக பயணம் எனக் கூறி கருத்து கூற மறுத்தார்.குலதெய்வ கோயிலான செண்பகத்தோப்பு பேச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்தினருடன் வழிபட்டார். பின் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி