உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  புத்தகங்கள் எடுத்துக்கூறும் வரலாறு, அரசியல் நிகழ்வுகள் கற்க உதவும் கண்காட்சி

 புத்தகங்கள் எடுத்துக்கூறும் வரலாறு, அரசியல் நிகழ்வுகள் கற்க உதவும் கண்காட்சி

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து 4வது புத்தகத்திருவிழா நடக்கிறது. இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு தொடர்பான புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கிறது. நவ.24 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை பார்த்து வாங்கலாம். மேலும் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்