மேலும் செய்திகள்
டிராக்டரை நிறுத்தி குப்பை கொட்டும் டெக்னிக்
19-Dec-2024
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்யும் வகையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, அண்ணாதுரை சிலை பகுதி, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. பஜார் பகுதிகளில் ரோடு குறுகலாக இருப்பதால் ஏற்கனவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. இதில் சுற்றி திரியும் மாடுகளாலும் இடைஞ்சல் ஏற்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் மாடுகள் படுத்து ஓய்வு எடுப்பதால் காலையில் கடைகளை திறக்க முடியாமல் கடைக்காரர்கள் அவதிப்படுகின்றனர். தொடர்ந்து மாடுகளால் இடைஞ்சல் ஏற்படுவது குறித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கட்டுப்படுத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் காரணங்களை கூறுகின்றனரே தவிர, நகரில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை.மாவட்ட நிர்வாகம் தான் இதுகுறித்து நகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும்.
19-Dec-2024