மேலும் செய்திகள்
பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி
6 minutes ago
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
8 minutes ago
சிப் டூ ஸ்டார்ட் அப் ஆய்வக திறப்பு விழா
9 minutes ago
சிவகாசி: சிவகாசி திருப்பதி நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் 63. இவரது மனைவி லதா. எம்.புதுப்பட்டியில் இவர்கள் நடத்தி வரும்அய்யாவு மெட்ரிக் பள்ளியில் செல்லப்பாண்டியன் தாளாளராகவும் லதா முதல்வராகவும் உள்ளனர். டிச. 4ல் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை திரும்பி வந்தனர். கதவை திறக்கும் போது வீட்டின் முன் பக்க ஜன்னல் கம்பி அறுக்கட்டிருந்தது. பீரோவில் இருந்த துணிகள் வெளியே சிதறி கிடந்தது. போலீசார் விசாரணையில் செல்லப்பாண்டியன் நகைகளை வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளதாகவும் வீட்டில் பணம் ஏதும் வைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். கைரேகை நிபுணர்கள் வீட்டில் ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
6 minutes ago
8 minutes ago
9 minutes ago