உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு கூட்டம்

 விழிப்புணர்வு கூட்டம்

நரிக்குடி: நரிக்குடி சிறுவனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய சுகாதார வளாகம் திறந்து வைக்கப்பட்டது. ஒன்றிய அலுவலர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கை கழுவும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல் அழகாபுரி, குறவைகுளத்தில் கனவு இல்ல வீடுகளில், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திறந்தவெளி பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கழிப்பறையை பயன்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாவட்ட திட்ட அதிகாரி பிரசாந்த் உட்பட கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !