மேலும் செய்திகள்
கல்லுாரி விளையாட்டு விழா
29-Dec-2024
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் பெண்கள் மையம் சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கர சேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் செல்லத்தாய் வரவேற்றார். வழக்கறிஞர் ராஜா கலந்து கொண்டு பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், கனரா வங்கி முதன்மை மேலாளர் பிலால் ஷாஜகான் நிதி மேலாண்மை, உதவி பேராசிரியை மகேஸ்வரி போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது குறித்தும் விளக்கினர். மைய ஒருங்கிணைப்பாளர் கமலேஸ்வரி நன்றி கூறினார்.
29-Dec-2024