உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேவாரப் பாடல்களுக்கு பரதநாட்டியம்

தேவாரப் பாடல்களுக்கு பரதநாட்டியம்

திருச்சுழி: திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் மதுரை கலா கேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை முயற்சி நடந்தது.கோயிலில் மாணவிகள் பல்வேறு நடனங்கள் ஆடினர். அகாடமி இயக்குனர் அம்சினி தலைமையில் நடனப்பள்ளி மாணவிகள் 14 பாண்டிய சிவஸ்தலங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் ஆயிரம் கி.மீ., பயணம் செய்து உலக சாதனை மேற்கொள்ளும் முயற்சியாக, பாண்டிய சிவஸ்தலங்களில் அந்த கோயிலுக்குரிய தேவார பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சுழி கோயிலில் 12 மாணவிகள் நடனம் ஆடி உலக சாதனை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை