உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

பா.ஜ., மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் பார்லி., தேர்தலுக்கான பா.ஜ.,வின் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள், அனைத்து சமுதாய மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வழங்கினார்.விருதுநகரில் பார்லி தேர்தலுக்காக பா.ஜ., வின் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தலைமையில் நடந்தது. இதில் பா.ஜ., மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன், முன்னாள் எம்.பி., காரி வேந்தன், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் விருதுநகர் வியாபாரத் தொழில் துறைச் சங்கத்தின் தலைவர் யோகன் தலைமையில் வணிகர்கள் சிறு விவசாயிகள், வணிகர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்படாத வகையில் இணைய வழி வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வழங்கினர். அருப்புக்கோட்டை நெசவாளர்கள் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்குவது போல சலுகைகளை விசைத்தறிகளுக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை பட்டியலில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை