உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்சோவில் சிறுவன் கைது

போக்சோவில் சிறுவன் கைது

விருதுநகர்: சென்னையில் இருந்து ரயிலில் வந்த சிறுமியை அழைத்துச் சென்ற 17 வயது சிறுவனை, விருதுநகர் ரயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.சென்னையில் இருந்து பிப்.11ல் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செங்கோட்டைக்கு தாயுடன்17 வயது சிறுமி ஒருவர் வந்தார். சிறுமியை காதலித்த 17 வயது சிறுவன் திருச்சிக்கு வந்து சிறுமியை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை காணவில்லை என தாய் விருதுநகர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ. கார்த்திக் ரகுநாத் தலைமையிலான போலீசார் சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். சிறுவனை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ