உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காருக்குள் இறந்த நிலையில் சிறுவன்

 காருக்குள் இறந்த நிலையில் சிறுவன்

பேரையூர்: பேரையூர் அருகே மர்மமான முறையில் காருக்குள் இறந்து கிடந்த 7 வயது சிறுவனை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எஸ். மேலபட்டியில் பொங்கல் திருவிழா கடந்த நான்கு நாட்களாக நடந்தது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பாட்டி வீட்டிற்கு கடந்த நவ.13ம் தேதி திருமங்கலம் நடுகோட்டை ராஜசேகர், மகன் சண்முகவேல் 7, வந்திருந்தனர். வெளியே விளையாடிக் கொண்டிருந்த சண்முகவேல் மாலை 4:00 மணியிலிருந்து காணவில்லை. அதே ஊரைச் சேர்ந்த சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டராக உள்ள மாரிமுத்து 37வும் விழாவுக்காக எஸ்.மேல பட்டியில் உள்ள அவர் தாயார் வீட்டுக்கு காரில் வந்திருந்தார். பொங்கல் முடிந்து நேற்று இரவு சிவகாசி செல்வதற்காக காரை திறந்த போது துர்நாற்றம் வீசியது. காருக்குள் சண்முகவேல் இறந்த நிலையில் இருந்தார். பேரையூர் ஏ.எஸ்.பி அஸ்வினி தலைமையிலான சண்முகவேலில் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை