உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் மோதியதில் சிறுவன் பலி

கார் மோதியதில் சிறுவன் பலி

விருதுநகர்:விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் விலக்கில் மக்களைத்தேடி மருத்துவம் முகாமிற்கு சென்ற கார் மோதியதில் டூவீலர் ஓட்டி வந்த குமார் 14, பலியானார்.மதுரை மாவட்டம் ஆனையூரை சேர்ந்தவர் குமார். இவர் விருதுநகர் அருகே உப்போடையை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் வீட்டில் தங்கி கூலி வேலை செய்கிறார். இவர் பிப்., 14 மாலை 6:00 மணிக்கு விருதுநகர்-சிவகாசி ரோட்டில் ஆனைக்குட்டம்விலக்கில் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். அப்போது எதிர்த்திசையில் மக்களை தேடி மருத்துவம் முகாமிற்கு சென்ற கார் மோதியதில் குமார் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் பலியானார். ஆமத்துார் போலீசார் ஒப்பந்த காரை ஓட்டிய பழனிக்குமாரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை