உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  உற்பத்தியை புறக்கணிக்க கறிக்கோழி சங்கம் தீர்மானம்

 உற்பத்தியை புறக்கணிக்க கறிக்கோழி சங்கம் தீர்மானம்

சாத்துார்: பண்ணை கறிக்கோழி விலையை கிலோவிற்கு, 20 ரூபாயாக உயர்த்தக்கோரி, 2026 ஜன., 1 முதல், உற்பத்தி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஒருங்கிணைந்த கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் ஒருங்கிணைந்த கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் நலச் சங்க கூட்டம், மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பண்ணையில் வளர்க்கப்படும் கறிக்கோழிக்கு, பி.சி.சி.ஐ., 1 கிலோவுக்கு 6.50 ரூபாய் விலை நிர்ணயித்தது. பத்தாண்டுகளாக இந்த விலையை உயர்த்தவில்லை. தற்போது கறிக்கோழி பண்ணையை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை உயர்ந்துள்ள நிலையில் பி.சி.சி.ஐ., பண்ணையில் வாங்கப்படும் கறிக்கோழியின் விலையை மட்டும் உயர்த்தவில்லை. பண்ணைகளில் கறிக்கோழிக்கு வழங்கப்படும் விலையை, 1 கிலோவிற்கு 20 ரூபாயாக உயர்த்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 2026 ஜன., 1 முதல் மாநிலம் தழுவிய அளவில், உற்பத்தி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்