மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
4 hour(s) ago
தொடர் மழையால் விவசாய பணிகள் விறு விறு
4 hour(s) ago
சேதமான மின்கம்பத்தால் விபத்து அபாயம்
4 hour(s) ago
வீட்டில் போலி மருத்துவம்: பெண் மீது வழக்கு
4 hour(s) ago
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி பயிர்களான சிறுபயறு, சிவப்பு சோளம் அறுவடை நடக்கிறது. இதில் வரக்கூடிய விவசாயக் கழிவுகளை ரோட்டின் ஒரங்களில் கொட்டி தீ வைப்பதால் அருகே உள்ள மரங்கள் கருகி பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகரை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் மானாவாரி பயிர்களான உளுந்து, தட்டாம்பயிறு, கம்பு, சோளம் போன்றவை அறுவடையின் போது ரோட்டில் உலர்த்தி அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான உலர்களங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதிகளவு அறுவடை நடைபெறும் போது விளை நிலத்திற்கு அருகே உள்ள ரோட்டில் போட்டு காயவைப்பதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.ரோட்டை உலர்களமாக பயன்படுத்துபவர்கள் கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை. விவசாயகழிவுகள் உரமாக மாற்றி பயன்படுத்தாமல் ரோட்டின் ஒரங்களில் கூட்டி கொட்டி விடுகின்றனர். இவை காய்ந்தால் எளிதில் தீப்பிடித்து எரியும் தன்மை கொண்டவை. ஊரகப்பகுதிகளில் ரோட்டின் இருபுறமும் புதியதாக மரங்கள் நடப்பட்டு அந்தந்த ஊராட்சிகளில் நுாறுநாள் திட்ட பணியாளர்களால் பராமரிக்கப்படுகின்றன.இந்நிலையில் விவசாய கழிவுகள் காய்ந்த நிலையில் இருக்கும் போது மர்ம நபர்கள் தீ ை வத்து விடுகின்றனர். இந்த நேரங்களில் அருகில் இருக்கும் வளர்ந்து வரும் மரங்கள், வளர்ந்த மரங்களும் தீயில் கருகி பாழாகின்றன. எனவே நகர், ஊரகப்பகுதிகளில் விவசாயிகள் கழிவுகளை முறையாக அகற்றுவதை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago