மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் பஸ்கள் இயக்கம்
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்கு வரும் சிவகாசி முதல் மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் இன்று முதல் மீனாம்பிகை பங்களா வழியாக செல்லும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21 முதல் முழு பயன்பாட்டிற்கு வந்தது. மக்களின் கோரிக்கை ஏற்று சிவகாசி, மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் மதுரை செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் திருமங்கலம், மதுரை மார்க்கமாக செல்லும் நகர், புறநகர் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட், மீனாம்பிகை பங்களா வழியாக இன்று முதல் மதுரை செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.