உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வணிகவியல் கருத்தரங்கம்

வணிகவியல் கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பாக, 'தொழில்நுட்பம் ,புதுமை மூலம் வணிக வளர்ச்சி' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லுாரி தலைவர் சங்கர சேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில் ராஜன், முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியை பாக்கியராஜி வரவேற்றார். சீனாவைச் சேர்ந்த சீனா - பிரிட்டிஷ் கல்லுாரி பேராசிரியர் ஜெயராஜ், திருச்சியை சேர்ந்த தந்தை பெரியார் கல்லுாரி இணை பேராசிரியர் பரமசிவன் சிறப்புரையாற்றினர். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். துறை தலைவர் செந்தில்குமார், பொருளாளர் பிரபாகரன், இணைச்செயலாளர் விமல்ராஜ் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை