உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் ஒரு பணியிடமும், சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. வயது வரம்பு 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். பாதுகாப்பு அலுவலருக்கு ரூ.27,804 சம்பளமும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், மனநல மருத்துவம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை அல்லது இளங்கலை பட்டப்படிப்பு பெற்றும், 2 ஆண்டு அனுபவமும் இருக்க வேண்டும். கணினி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.சிறப்பு சிறார் காவல் பிரிவின் சமூகப்பணியாளர் பணிக்கு ஒரு மாத தொகுப்பூதியம் ரூ.18,536. சமூகப்பணி/ சமூகவியல்/ சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் www.virudhunagar.nic.inலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். தொலைபேசி எண். 0456-2-29 3946 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஜன. 27 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை