உள்ளூர் செய்திகள்

பிரசார இயக்கம்

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் செய்திக்குறிப்பு: மாவட்டம் முழுவதும் மே 29 முதல் ஜூன் 12 வரை வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நடத்தப்பட உள்ளது. 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசார இயக்கம் நடைபெறும். இதில் காரி பருவத்திற்கு ஏற்ற புதிய பயிர் ரகங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இயற்கை விவசாய முறைகளை ஊக்குவித்தல், மண்வள அட்டையின் அடிப்படையில் பயிர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள், சமச்சீர் உர பயன்பாடு, தகவல் தொழில்நுட்ப கருவிகள், நவீன உபகரணங்களை பயன்படுத்தி நவீன விவசாயம், மத்திய மாநில அரசு திட்டங்கள் ஆகியவை விளக்கப்படும். விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி